சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கு: திருப்தியளிக்கும் வகையிலான ஆதாரங்களை கேட்கும் உச்சநீதிமன்றம்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், திருப்தி அடையும் வகையிலான ஆதாரங்களை சமர்பிக்குமாறு சிபிஐயிடம் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கு: திருப்தியளிக்கும் வகையிலான ஆதாரங்களை கேட்கும் உச்சநீதிமன்றம்


சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், திருப்தி அடையும் வகையிலான ஆதாரங்களை சமர்பிக்குமாறு சிபிஐயிடம் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சாரதா, ரோஸ்வேலி நிதிநிறுவன மோசடி விவகாரங்கள் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் சென்றபோது, அதை அந்த மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மனு தொடுக்கப்பட்டது. அதன்மீது கடந்த பிப்ரவரி மாதம் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், ராஜீவ் குமாருக்கு எதிராக கைது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது, சிபிஐ விசாரணைக்கு ராஜீவ் குமார் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் ஓர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில்,
 
"சீட்டு நிறுவன மோசடி வழக்குகளில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய சதியை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு, கொல்கத்தா நகர காவல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ விரும்புகிறது" என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு,

"ஆதாரங்கள் அழிக்கப்பட்டதில் இவருடைய பங்கு குறித்து திருப்தியளிக்கும் வகையிலான ஆதாரங்களை கொடுங்கள். ஆதாரங்களை நாளை சமர்பிக்கலாம்" என்று தெரிவித்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com