சூடுபிடிக்கும் உன்னாவ் பாலியல் விவகாரம்: குல்தீப் சென்கார் பாஜகவில் இருந்து நீக்கம்

உன்னாவ் பெண் பாலியல் விவகாரத்தில், பாஜக எம்எல்ஏவுக்கு எதிராக புகார் அளித்த ஒரே காரணத்துக்காக அவர் சுற்றி வளைத்து பல வகையிலும் நெருக்குதலுக்கு ஆளானார்.
சூடுபிடிக்கும் உன்னாவ் பாலியல் விவகாரம்: குல்தீப் சென்கார் பாஜகவில் இருந்து நீக்கம்


புது தில்லி: உன்னாவ் பெண் பாலியல் விவகாரத்தில், பாஜக எம்எல்ஏவுக்கு எதிராக புகார் அளித்த ஒரே காரணத்துக்காக அவர் சுற்றி வளைத்து பல வகையிலும் நெருக்குதலுக்கு ஆளானார்.

புகார் கொடுக்கவே, முதல்வரின் வீட்டு வாயிலில் தற்கொலை முயற்சி செய்யும் அளவுக்கு போராட வேண்டியிருந்தது.

புகார் கொடுத்த பிறகும், அவர்களுக்கு நெருக்குதல் அதிகரிக்கவே செய்தது. பெண்ணின் தந்தையே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல்துறையினரின் விசாரணையில் பலியாக, முக்கிய சாட்சியான உறவினரும் காவல்துறையின் விசாரணைக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

இந்த நிலையில், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண் சென்ற கார் மீது வேகமாக வந்த டிரக் மோதி விபத்துக்குள்ளானதில், அவரும், வழக்குரைஞரும் படுகாயம் அடைந்தனர். உடன் வந்த இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்ந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், உன்னாவ் பெண்ணுக்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த இரு பெண் காவலர்கள் உட்பட மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விபத்து நடந்த போது இந்த காவலர்கள் உன்னாவ் பெண்ணுடன் பாதுகாப்புக்கு வராதது பெரும் கேள்விக்குறியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், உன்னாவ் பெண் வந்த கார் விபத்துக்குள்ளானது திட்டமிட்ட விபத்து எனப் புகார் எழுந்ததை அடுத்து, சிறையில் இருக்கும் பாஜக எம்எல்ஏ குல்தீப் சென்கார் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது கட்சியில் இருந்தே நீக்கி கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com