Enable Javscript for better performance
முசாஃபர்நகர் கலவர வழக்கு: குற்றவாளியின் நிலத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு இந்தியா

    முசாஃபர்நகர் கலவர வழக்கு: குற்றவாளியின் நிலத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published On : 04th August 2019 02:32 AM  |   Last Updated : 04th August 2019 02:32 AM  |  அ+அ அ-  |  

    உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவரின் நிலத்தை பறிமுதல் செய்வதற்கு முசாஃபர்நகர் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
     முசாஃபர்நகர் மாவட்டம், காவேல் கிராமத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ஆம் தேதி இருதரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இதில் ஷாநவாஸ் என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முசாஃபர்நகர் மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களில் மிகப்பெரிய கலவரம் மூண்டது. இந்தக் கலவரத்தில் 60 பேர் இறந்தனர்.
     40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், தாங்கள் வசித்து வந்த பகுதிகளில் இருந்து வெளியேறி வேறு இடத்தில் குடிபெயர்ந்தனர். ஷாநவாûஸ கொலை செய்ததாக ரவீந்தர் சிங், பிரகலாத், பிஷன் சிங், டெண்டு, தேவேந்தர், ஜிதேந்தர் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
     இதுதொடர்பாக, முசாஃபர்நகர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட 6 பேரில் ரவீந்தர் சிங் தவிர மற்ற அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். எனினும், தலைமறைவான ரவீந்தர் சிங்கை காவல் துறையினரால் இதுவரை கைது செய்ய இயலவில்லை.
     இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ராகேஷ் கெளதம் முன்பு சனிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரவீந்தர் சிங்கை கைது செய்ய இயலாத காரணத்துக்காக காவல் துறையினரை கண்டித்த நீதிபதி, ரவீந்தர் சிங்குக்கு சொந்தமான நிலத்தைப் பறிமுதல் செய்யுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp