கட்சித் தொண்டர்களுக்கே அதிக முக்கியத்துவம்: பாஜக எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை

"கட்சித் தொண்டர்கள் தாயைப் போன்றவர்கள்; தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் நினைக்கக் கூடாது. அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' என்று
கட்சித் தொண்டர்களுக்கே அதிக முக்கியத்துவம்: பாஜக எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை

"கட்சித் தொண்டர்கள் தாயைப் போன்றவர்கள்; தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் நினைக்கக் கூடாது. அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' என்று பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்களுக்கு 2 நாள் பயிற்சி நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இதில் நாடாளுமன்ற இரு அவைகளைச் சேர்ந்த 380-க்கும் மேற்பட்ட பாஜக எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை சனிக்கிழமை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

கட்சித் தொண்டர்கள், தாயைப் போன்றவர்கள். தாய்தான் மகனை வளர்த்து பெரிய ஆளாக்குவார்கள். அதேபோல், கட்சியின் வளர்ச்சிக்கு தொண்டர்களின் பணி மிகவும் முக்கியமானதாகும். ஆதலால், கட்சித் தொண்டர்கள் மனதில் தாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டு விடக் கூடாது. எனவே எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், கட்சியையும், கட்சித் தொண்டர்களையும் மறந்து விடக் கூடாது. தேர்தலில் தங்களுக்காக உழைத்த கட்சித் தொண்டர்களுடன், தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாது, எப்போதும் எம்.பி.க்கள் தொடர்பில் இருக்க வேண்டும். பாஜக-வின் இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்கு கட்சித் தொண்டர்களும், அவர்களின் கடின உழைப்பும்தான் காரணம். பாஜகவானது ஒரு குடும்பம் போன்றது. கட்சியின் வளர்ச்சிக்கு சித்தாந்தமும், கொள்கைகளும்தான் காரணம். ஒரு குடும்ப பாரம்பரியத்தால் கட்சி வளர்ச்சியடையவில்லை.

எம்.பி.க்களுக்கு எத்தனை வயது ஆனாலும் சரி, அவர்கள் தங்களை புதியவற்றை கற்கும் மாணவர்களாகவே கருதி செயல்பட வேண்டும். தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்றல் என்பது தொடர்ச்சியான செயல்பாடாகும். இது மிகவும் அவசியம் என்றார் மோடி.

பாஜக, அதன் சித்தாந்தம், நாடாளுமன்ற செயல்பாடுகள் ஆகியவை குறித்து கட்சி எம்.பி.க்களுக்கு விளக்கும் நோக்கில் இந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையும் தொடர்கிறது. அன்றும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com