Enable Javscript for better performance
அரசாணையை கிழித்து அமளியில் ஈடுபட்ட பிடிபி உறுப்பினர்- Dinamani

சுடச்சுட

    

    அரசாணையை கிழித்து அமளியில் ஈடுபட்ட பிடிபி உறுப்பினர்

    By DIN  |   Published on : 05th August 2019 05:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pdp

     

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370-வது மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பாணை குடியரசுத் தலைவர் கையெழுத்துடன் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இதனை அறிவித்தார். இதற்கு காங்கிரஸ், பிடிபி, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், மாநிலங்களவையில் இருந்த பிடிபி கட்சியின் எம்.பி. மிர் முகம்மது ஃபையஸ், அந்த அரசாணையை கிழித்தெறிந்து அமளியில் ஈடுபட்டார். இதையடுத்து மாநிலங்களவையில் இருந்து 2 பிடிபி உறுப்பினர்களையும் வெளியேற்றுமாறு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai