Enable Javscript for better performance
இரண்டாகப் பிரிகிறது காஷ்மீர்: ராணுவம், விமானப் படை தயார் நிலையில் இருக்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    இரண்டாகப் பிரிகிறது காஷ்மீர்: ராணுவம், விமானப் படை தயார் நிலையில் இருக்க உத்தரவு

    By DIN  |   Published on : 05th August 2019 02:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kashmir


    காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370 சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக அமித் ஷா அறிவித்ததை அடுத்து, ராணுவம், விமானப் படை தயார் நிலையில் இருக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    தில்லி மெட்ரோ ரயில் உச்சபட்ச பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ரயில் பாதையும் ரெட் அலர்ட் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக, மெட்ரோ ரயில்நிலையத்துக்குள் செல்வோரும், வெளியேறுவோரும் தீவிர பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    காஷ்மீர் விவகாரம் காரணமாக ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்பதால், எந்த குறிப்பிட்ட காரணத்தையும் கூறாமல், நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    அதே சமயம், ராணுவமும், விமானப் படையும் எந்த சூழ்நிலையையும் கையாளும் விதத்தில் தயாராக இருக்குமாறு மத்திய அரசு கூறியுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai