Enable Javscript for better performance
ஜம்மு-காஷ்மீரில் 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    ஜம்மு-காஷ்மீரில் 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

    By DIN  |   Published on : 05th August 2019 08:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    amit_shah_on_10_percent_in_jk

     

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370-வது மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பாணை குடியரசுத் தலைவர் கையெழுத்துடன் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

    லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்படும். லடாக் யூனியன் பிரதேசம் சட்டப்பேரவை இல்லாததாகவும், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடனும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இதனை அறிவித்தார். இதையடுத்து இவ்விரு மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. 

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில்10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai