Enable Javscript for better performance
10,000 visitors met Unnao rape accused Kuldeep Singh Sengar in Sitapur Jail- Dinamani

சுடச்சுட

    

    அந்த குல்தீப் செங்கார் எம்எல்ஏ சிறையில் எப்படியிருக்கிறார் தெரியுமா?

    By DIN  |   Published on : 05th August 2019 04:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Kuldeep_Sengar


    புது தில்லி: பாலியல் புகார் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரை திகார் சிறைக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உன்னாவ் பெண் பாலியல் பலாத்கார புகார் அளித்ததை அடுத்து கைது செய்யப்பட்ட குல்தீப் சிங் செங்கார், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சிதாபுர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

    இந்த நிலையில், உன்னாவ் பெண் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி, இரண்டு பேர் உயிரிழந்தனர். வழக்குரைஞர் உட்பட உன்னாவ் பெண்ணும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதையடுத்து செங்கார் மற்றும் 9 பேர் மீது சிபிஐ கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உன்னாவ் பெண் பாலியல் பலாத்கார வழக்கை தொடர்ந்து விசாரித்து 45 நாட்களுக்குள் முடிக்க உத்தரவிட்டது.

    வழக்கு விசாரணையை புது தில்லிக்கு மாற்றியிருக்கும் உச்ச நீதிமன்றம், குல்தீப் சிங் செங்காரை, திகார் சிறைக்கு மாற்றவும் உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே, பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட குல்தீப் சிங் செங்காரை கடந்த 14 மாத சிறை வாசத்தில், சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்று சந்தித்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. 

    சிபிஐ அளித்திருக்கும் தகவலில், தினமும் செங்காரைப் பார்க்க சுமார் 20 - 25 பேர் வருவதாகவும், சிலர் எம்எல்ஏவை நேரடியாக சந்தித்துப் பேசவும் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், செங்காரை சந்திக்க வந்த அனைத்து நபர்களைப் பற்றிய விவரங்களையும் சிபிஐ கோரியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai