4,000 விசாரணை நீதிபதிகள் நாடு முழுவதும் நியமனம்: ரஞ்சன் கோகோய்

நாடு முழுவதும் 4,000 விசாரணை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்தார்.
4,000 விசாரணை நீதிபதிகள் நாடு முழுவதும் நியமனம்: ரஞ்சன் கோகோய்

நாடு முழுவதும் 4,000 விசாரணை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்தார்.
 அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் உயர்நீதிமன்ற வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்காக ரஞ்சன் கோகோய் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினார். அப்போது, அவர் பேசியதாவது:
 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 50 ஆண்டுகால வழக்குகளும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட 25 ஆண்டுகால வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
 அஸ்ஸாமில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து தீர்த்து வைக்க வேண்டும். கடந்த மாதம் 10ஆம் தேதி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டேன். 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் அழைப்பாணைகள்கூட இன்னும் அனுப்பப்படவில்லை.
 நாடு முழுவதும் காலியாக இருந்த 6,000 நீதிபதி பணியிடங்களில் 4,000 பணியிடங்கள் ஏற்கெனவே நிரப்பப்பட்டுவிட்டன. மேலும், 1,500 நீதிபதி பணியிடங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிரப்பப்படும். தனிநபர்களும், சில அமைப்புகளும் பொறுப்பின்றி இருப்பதை இன்றைய காலகட்டத்தில் பார்க்க முடிகிறது. இது விதிவிலக்குதான். நாட்டின் சட்ட பூர்வமான அமைப்புகள் இவர்களை மாற்றிவிடும் என்று நம்புகிறேன்.
 நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகளையும், உத்தரவுகளையும் வைத்துதான் மக்கள் நீதித் துறை மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். அந்த நம்பிக்கையில்தான் நமது நீதித் துறை உயிர்ப்புடன் இயங்கி வருகிறது.
 அஸ்ஸாமில் பல்வேறு வகையான கலாசாரங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. நீதிபதிகளும், நீதித் துறை அதிகாரிகளும் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று ரஞ்சன் கோகோய் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com