வெட்கக் கேடு.. வெட்கக் கேடு: அவையில் எழும் எதிர்க்கட்சிகளின் முழக்கம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது வெட்கக் கேடானது என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
வெட்கக் கேடு.. வெட்கக் கேடு: அவையில் எழும் எதிர்க்கட்சிகளின் முழக்கம்


புது தில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது வெட்கக் கேடானது என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குறித்து மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

அதன்படி
1. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370 சட்டப்பிரிவு நீக்கப்படுகிறது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

2. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. அதாவது காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக மாற்றப்படும். 

3. லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமித் ஷா பேசுகையில், கடந்த பல ஆண்டுகளாக 3 குடும்பங்கள் இதுவரை காஷ்மீரை கொள்ளையடித்து வந்துள்ளன. நாட்டின் பிற பகுதி ஏழைகளுக்குக் கிடைக்கும் உரிமைகள் காஷ்மீரில் வாழும் ஏழைகளுக்குக் கிடைப்பதில்லை என்றும்  அமித் ஷா தெரிவித்தார்.

 இந்த அறிவிப்புகள் குறித்து கருத்துக் கூறியிருக்கும் மதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வைகோ, இது எமர்ஜென்சி நடவடிக்கை என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அவசர தேவை என்றார்.

அமளியின் போது அரசியல் சாசன கையேட்டை கிழிக்க முயன்றதாக மெகபூபா முஃப்தி கட்சியின் 2 எம்பிக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அதே சமயம், காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்ற காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது அரசியல் சாசன அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com