தகுதி அடிப்படையில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுங்கள்: வெங்கய்ய நாயுடு

அரசியலில் தங்களது பிரதிநிதிகளை 4 தகுதிகளின் அடிப்படையில் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தினார்.
தகுதி அடிப்படையில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுங்கள்: வெங்கய்ய நாயுடு

அரசியலில் தங்களது பிரதிநிதிகளை 4 தகுதிகளின் அடிப்படையில் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தினார்.
 பிகார் மாநிலம், பாட்னா பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
 பஞ்சாயத்து தலைவர், எம்எல்ஏ, எம்.பி. தேர்தலின் மூலம் மக்கள் தங்களுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகளை ஒப்படைக்கின்றனர்.
 மக்கள் தங்களது பிரதிநிதிகளை நல்ல குணம், திறமை, பண்பு, நடத்தை ஆகிய நான்கு தகுதிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 அதேவேளையில், பணம், மதம், ஜாதி, குற்றப் பின்னணி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். ஜாதி, மத, பாலின அடிப்படையில் எந்தவொரு பாகுபாடும் காட்டப்படக் கூடாது.
 தற்போதுள்ள சில அரசியல்வாதிகளிடம் நல்ல குணம், திறமை, பண்பு, நடத்தை போன்ற தகுதிகள் இல்லாதது துரதிருஷ்டவசமானது. மேலும், அவர்கள் பணம், ஜாதி, மதம் ஆகியவற்றில் நாட்டம் கொண்டிருப்பதுடன், குற்றப் பின்னணி உடையவர்களாகவும் உள்ளனர். அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
 பாட்னா பல்கலை.க்கு மத்திய அந்தஸ்து: பாட்னா பல்கலைக்கழகத்துக்கு "மத்திய பல்கலைக்கழகம்' அந்தஸ்தை வழங்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடியரசுத் துணைத் தலைவர் என்ற முறையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் ஆலோசிக்கிறேன். பாட்னா பல்கலைக்கழகத்துக்கு அந்த அந்தஸ்து கிடைக்கப்பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதில் தனிப்பட்ட முறையில் நான் கவனம் செலுத்துகிறேன் என்றார் வெங்கய்ய நாயுடு.
 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிகார் முதல்வர் நிதீஷ் குமார் இதுகுறித்து பேசுகையில், "பாட்னா பல்கலைக்கழகத்துக்கு மத்திய பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்தை வழங்க வேண்டுமென நீண்டகாலமாக பிகார் அரசு கோரி வருகிறது. முன்பு அது நிகாரிக்கப்பட்டுள்ள நிலையில், குடியரசு துணைத் தலைவர் அதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்வார் என நம்புகிறேன்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com