மகாராஷ்டிரத்தில் எதிர்க்கட்சிகள் தோல்வியடையும்

மகாராஷ்டிரத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரலாறு காணாத தோல்வியை எதிர்கொண்டிருப்பதாக அந்த மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் எதிர்க்கட்சிகள் தோல்வியடையும்

மகாராஷ்டிரத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரலாறு காணாத தோல்வியை எதிர்கொண்டிருப்பதாக அந்த மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
 மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை உள்ளிட்ட கட்சிகள் சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
 இந்நிலையில், மாநிலத்தில் மகா ஜனாதேஷ் யாத்திரை என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், கோண்டியா நகரில் செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். அவர் கூறியது:
 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எதிர்ப்பவர்கள் தங்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்துள்ளனர். தங்களின் தோல்விக்கு ஒரு காரணத்தைக் கூறுவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கைகோர்த்துள்ளன. அக்கட்சிகள் இப்போதே தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டன.
 காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு எதிர்க்கட்சிகளும் திசை தெரியாமல் அலைக்கின்றன என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com