வங்கி நியமனங்கள் விவகாரம்: மெஹபூபாவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை நோட்டீஸ் 

ஜம்மு-காஷ்மீர் வங்கியில் ஊழியர்களை நியமனம் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் அந்த மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தியிடம் விளக்கம் கேட்டு
வங்கி நியமனங்கள் விவகாரம்: மெஹபூபாவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை நோட்டீஸ் 

ஜம்மு-காஷ்மீர் வங்கியில் ஊழியர்களை நியமனம் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் அந்த மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தியிடம் விளக்கம் கேட்டு அந்த மாநில லஞ்ச ஒழிப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 மெஹபூபாவுக்கு கடந்த சனிக்கிழமை அனுப்பப்பட்ட அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
 சில அமைச்சர்களின் பரிந்துரையின்பேரில் சிலரை ஜம்மு-காஷ்மீர் வங்கியின் தலைவர் பணி நியமனம் செய்ததாக, காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஊழியர்களை நியமிப்பதற்கு வாய்மொழியாகவோ அல்லது வேறு வகையிலோ அமைச்சர்களின் பரிந்துரைகளுக்கு நீங்கள் (மெஹபூபா) ஒப்புதல் அளித்தீர்களா என்று தெரிய வேண்டும். எனவே, இதுகுறித்து நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த நோட்டீûஸ மெஹபூபா முஃப்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில், "இந்த நோட்டீûஸக் கண்டு நான் வியப்படையவில்லை. காஷ்மீரில் முன்னணி தலைவர்களின் செயல்பாடுகளை முடக்குவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. இதுபோன்ற தந்திர வேலைகள் எடுபடாது' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முந்தைய மக்கள் ஜனநாயகக் கூட்டணி-பாஜக கூட்டணி ஆட்சியில், ஜம்மு-காஷ்மீர் வங்கியின் தலைவராக பர்வேஸ் அகமது இருந்தார். அந்தக் காலகட்டத்தில், புதிதாக ஊழியர்களை பணிநியமனம் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பர்வேஸ் அகமதுவை மாநில அரசு கடந்த ஜூன் மாதம் பதவிநீக்கம் செய்தது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com