Enable Javscript for better performance
மின்சாரம் தாக்கி 2 சிவபக்தர்கள் பலி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மின்சாரம் தாக்கி 2 சிவபக்தர்கள் பலி

    By DIN  |   Published On : 06th August 2019 02:31 AM  |   Last Updated : 06th August 2019 02:31 AM  |  அ+அ அ-  |  


    உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பத்ராவில் சிவனுக்கான காவடி யாத்திரையின்போது, மின்சாரம் தாக்கி இரு பெண் பக்தர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் 20 பேர் காயமடைந்தனர்.
    இதுதொடர்பாக அதிகாரிகள் திங்கள்கிழமை கூறுகையில்,காவடி யாத்திரையையொட்டி, சோபான் பகுதியில் உள்ள சோன் நதியில் இருந்து அருகில் உள்ள கோதானி சிவன் கோயிலுக்கு சிவ பக்தர்கள் காவடி எடுத்து சென்று கொண்டிருந்தனர். 
    செல்லும் வழியில், சிவபெருமான் புகைப்படம் இருந்த வாகனம் மீது உயர் அழுத்த மின் கம்பிகள் பலமாக மோதியதால் அந்த வாகனத்தில் மின்சாரம் பாய்ந்தது. மழை பெய்து சாலைகள் ஈரமாக இருந்ததால், சாலையிலும் மின்சாரம் பாய்ந்தது. இந்தச் சம்பவத்தில் ராணி(17) மற்றும் குஷ்பூ (17)  ஆகிய 2 பெண்கள் பலியாகினர். 
    15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வாராணசியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றனர்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp