காஷ்மீர் விவகாரம்: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரம்: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு


ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியது. மேலும், ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான, இரண்டு மசோதாக்களும் இன்று மக்களவையில் நீண்ட விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. 

மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வந்தன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவர்களுள் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இணைப்புக்கு ஆதரவு தெரிவிப்பதாக டிவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் பதிவு செய்துள்ள டிவிட்டர் பதிவில், 

"ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கை இந்திய ஒன்றியத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கையை நான் ஆதரிக்கிறேன். அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுத்தியிருந்தால் சற்று நன்றாக இருந்திருக்கும். அப்படி செய்திருந்தால் எந்த கேள்வியும் எழுப்பியிருக்க முடியாது. மற்றபடி, இது தேச நலன் சார்ந்தது. அதற்காக நான் இதை ஆதரிக்கிறேன்" என்றார்.

இதன்மூலம், இது காங்கிரஸ் கட்சிக்குள் மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யும் விவகாரத்தில், மாநிலங்களவை உறுப்பினரும், காங்கிரஸ் தலைமை கொறடாவுமான புவனேசுவர் கலிதா தனது எம்.பி பதவியை ராஜிநாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com