காஷ்மீர் விவகாரம் ஐ.நா.வுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கடிதம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்க இந்தியா திட்டமிட்டு வருவது குறித்து கடந்த வாரமே ஐ.நா. சபைக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் மஹமூத் குரேஷி கடிதம் எழுதியதாக பாகிஸ்தான் தெரிவி
காஷ்மீர் விவகாரம் ஐ.நா.வுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கடிதம்


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்க இந்தியா திட்டமிட்டு வருவது குறித்து கடந்த வாரமே ஐ.நா. சபைக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் மஹமூத் குரேஷி கடிதம் எழுதியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.


அந்த கடிதத்தில் குரேஷி மேலும் கூறியுள்ளதாவது:
காஷ்மீரில் மனித உரிமைகள் சூழ்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிகளில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்கள்  நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 35-ஏ மற்றும் அதனைத் தொடர்ந்து 370 சட்டப்பிரிவுகளை நீக்கவும் இந்தியா தயாராகி வருகிறது என்று அந்தக் கடிதத்தில் குரேஷி கூறியுள்ளார்.
அக் கடிதம்,  ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர், ஐ.நா. பொதுச் சபை தலைவர் ஆகியோருக்கு கடந்த 1-ஆம் தேதியே அனுப்பப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், காஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்காக ராணுவம் தயாராக உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

காஷ்மீர் மக்களின் போராட்டத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் எப்போதுமே துணை நிற்கும். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்கு நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் நடவடிக்கையை நிராகரிப்பதாக பாகிஸ்தான் அரசு எடுத்த முடிவுக்கு முழு ஆதரவை வழங்குவதாக ராணுவம் அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com