பிரதமர் மோடியுடன் எடியூரப்பா சந்திப்பு

 பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்து பல்வேறு நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தில்லியில் பிரதமர் மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா.
தில்லியில் பிரதமர் மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா.


 பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்து பல்வேறு நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக தில்லிக்குச் சென்ற எடியூரப்பா, பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.
பாஜக செயல் தலைவர் ஜெ.பி.நட்டாவையும் அவர் சந்தித்தார். இதைத் தொடர்ந்து, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவைச் சந்தித்து, மாநில அமைச்சரவையை அமைப்பது குறித்து ஆலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர்களை எடியூரப்பா சந்தித்தபோது, கட்சி எம்.பி. கே.ஷோபா,  எம்எல்ஏக்கள் ஜகதீஷ் ஷெட்டர், ஆர்.அசோக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பிரதமர் மோடியுடனான எடியூரப்பாவின் சந்திப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கர்நாடகத்தில் ஹூப்ளி, தார்வாட் ஆகிய நகரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமரிடம் எடியூரப்பா வலியுறுத்தினார். மேக்கேதாட்டு அணை விவகாரம், கிருஷ்ணா நதி நீர்த் தீர்ப்பாயம், மகதாயி நதி நீர்த் தீர்ப்பாயம் ஆகிவயற்றை அரசிதழில் விரைந்து வெளியிடுமாறு கோரிக்கை விடுத்தார்.
மத்திய அமைச்சர்களிடம் துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை அவர் முன்வைத்தார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தில்லியின் சாணக்கியபுரி பகுதியில் கட்டப்பட்டுவரும் கர்நாடக அரசு இல்லத்தையும் எடியூரப்பா பார்வையிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com