காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்த அவசர முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்: இந்தியா

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்த அவசர முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்த அவசர முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்: இந்தியா


புது தில்லி: காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்த அவசர முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியத் தூதரை திருப்பி அனுப்புவது, வர்த்தக உறவைத் துண்டித்துக் கொள்வது என்று பாகிஸ்தான் எடுத்திருக்கும் முடிவுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். உறவை முறித்துக் கொள்வதாக தன்னிச்சையாக எடுத்துள்ள முடிவு இரு நாட்டு உறவுகளையும் பாதிக்கும்.

காஷ்மீர் குறித்த முடிவுகள் பாகிஸ்தானுக்கு எதிர்மறையாக இருக்கும் என்பதில் அச்சரியமில்லை. பாகிஸ்தானின் தன்னிச்சையான முடிவுகள் இரு நாட்டு நல்லுறைவு பாதிக்கும் என்பதால், பாகிஸ்தான் தற்போது எடுத்திருக்கும் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் அதிகார வரம்பில் பாகிஸ்தான் தலையிட முற்படுவது ஒரு போதும் சரியாக இருக்காது என்றும் வெளியுறவுத் துறை பதிலளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com