
நில அபகரிப்பு, மோசடி புகார் காரணமாக உத்தரப் பிரதேச காவல் துறை முன்னாள் டிஜிபி ஜக்மோகன் யாதவுக்கு எதிராக போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
முன்னாள் அமைச்சர் பல்ராம்பூர் சிங் யாதவின் மகன் விஜய் சிங் யாதவ், ஜக்மோகன் யாதவுக்கு எதிராக நில அபகரிப்பு புகார் அளித்தார். அதன்பேரில், ஜக்மோகன் யாதவ் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணை நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேச வீட்டுவசதி வாரியமும் ஜக்மோகனுக்கு எதிராக நில அபகரிப்பு புகார் அளித்துள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.