சுடச்சுட

    

    ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

    By DIN  |   Published on : 10th August 2019 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    President_Ram_Nath_Kovind

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகைசெய்யும் "ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்துக்கு' குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கினார். இந்தத் தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை "ஜம்மு-காஷ்மீர்', "லடாக்' என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

    அதேபோல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்வதற்கான தீர்மானமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai