காங்கிரஸ் தலைவர் யார் என்பது இன்று இரவுக்குள் தெரியவரும்: அதிர் ரஞ்சன் தகவல்

அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. 
காங்கிரஸ் தலைவர் யார் என்பது இன்று இரவுக்குள் தெரியவரும்: அதிர் ரஞ்சன் தகவல்

அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. 

தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியில் தலைமையகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றக் கட்சிக் குழுத் தலைவர் சோனியா, ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்போது காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக மாநிலத் தலைவர்களுடன் ஒன்றிணைந்து 5 குழுக்களாகப் பிரிந்து விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், செயற்குழுக் கூட்டத்தில் இருந்து முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் வெளியேறினர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சோனியா கூறுகையில், காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பான கூட்டம் நடைபெறுகிறது. எனவே அதில் நானும், ராகுலும் பங்கேற்பது முறையாக இருக்காது என்பதால் வெளியேறினோம் என்று தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் அதிர் ரஞ்சன் சௌதாரி கூறுகையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று இரவு மீண்டும் 8:30 மணியளவில் கூடி நடைபெறவுள்ளது. எனவே இரவு 9 மணிக்குள் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com