ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகைசெய்யும் "ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்துக்கு' குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கினார்.
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகைசெய்யும் "ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்துக்கு' குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கினார். இந்தத் தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை "ஜம்மு-காஷ்மீர்', "லடாக்' என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

அதேபோல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்வதற்கான தீர்மானமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com