தமிழகத்தில் 11 சரணாலயங்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க ஒப்புதல்

தமிழகத்தில் 11 சரணாலயங்களையும், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சரணாலயத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க ஒப்புதல் அளித்துவிட்டதாக மத்திய வனம் மற்றும்

தமிழகத்தில் 11 சரணாலயங்களையும், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சரணாலயத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க ஒப்புதல் அளித்துவிட்டதாக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சமூக வலைதளமான சுட்டுரையில் அவர் வெளியிட்ட பல்வேறு பதிவுகளில், "சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு உதவுவதற்காக 13 சரணாலயங்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். வடுவூர், கஞ்சிரான்குளம், சக்கரகோட்டை, வேட்டங்
குடிஆகிய பறவைகள் சரணாலயங்கள், ஸ்ரீவில்லிபுத்தூர், மேகமலை, கொடைக்கானல், வல்லநாடு உள்ளிட்ட வனவிலங்கு சரணாலயங்கள் ஆகியவற்றை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சரணாலயங்கள் ஆகும்.
மகாராஷ்டிரத்தில் தங்கரேஷ்வர் வனவிலங்கு சரணாலயமும், சத்தீஸ்கரில் உள்ள புலிகள் சரணாலயமும் இந்தப் பட்டியலில் அடங்கும்.
1986-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பொருளாதார மண்டலம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com