சுடச்சுட

    

    ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் மன்மோகன் சிங்

    By DIN  |   Published on : 12th August 2019 03:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    manmohan singh01

    முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட இருக்கிறார். முன்னதாக, அவர் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரது பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்தது.
    இப்போது, ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது. அங்கிருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பாஜக மாநிலத் தலைவர் மதன் லால் சைனி கடந்த ஜூன் மாதம் காலமானார். அவர் கடந்த ஆண்டுதான் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்படிருந்தார் என்பதால், அங்கு மாநிலங்களவைக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடத்தில்தான் மன்மோகன் சிங் போட்டியிட இருக்கிறார். அவர் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்13) தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
    200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி 112 எம்எல்ஏக்களுடன் பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. மேலும் பகுஜன் சமாஜ் மற்றும் சில சுயேச்சை எம்எல்ஏக்களும் அக்கட்சிக்கு ஆதரவளித்து வருகின்றனர். எனவே, மன்மோகன் சிங் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. அவர் 1991-ஆம் ஆண்டு முதல் 2019 வரை அஸ்ஸாமில் இருந்து தொடர்ந்து 5 முறை மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 1998 முதல் 2004 வரை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார்.
    86 வயதாகும் மன்மோகன் சிங், தொடர்ந்து இருமுறை பிரதமராக இருந்ததுடன், மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர், ஆர்பிஐ கவர்னர், திட்டக்குழு துணைத் தலைவர், நிதியமைச்சர் என பல முக்கியப் பொறுப்புகளையும் வகித்துள்ளார். இந்தியாவில் உள்ள சிறந்த பொருளாதார நிபுணர்களில் குறிப்பிடத்தக்கவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai