துர்கா பூஜை குழுக்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்: மம்தா கண்டனம்

துர்கா பூஜை குழுக்களுக்கு மத்திய அரசு வருமான வரித் துறை மூலம் நோட்டீஸ் அனுப்பியது கண்டனத்துக்குரியது என்று  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
துர்கா பூஜை குழுக்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்: மம்தா கண்டனம்

துர்கா பூஜை குழுக்களுக்கு மத்திய அரசு வருமான வரித் துறை மூலம் நோட்டீஸ் அனுப்பியது கண்டனத்துக்குரியது என்று  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
இதுகுறித்து சமூக வலைதளமான சுட்டுரையில் அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
துர்கா பூஜைக்கு ஏற்பாடு செய்த பல்வேறு குழுக்களுக்கு வரிகளை செலுத்துமாறு கூறி வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அனைத்து திருவிழாக்களையும் நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம். எந்தவொரு விழாக் கொண்டாட்டங்களுக்கு வரி விதிக்க வேண்டாம் என்பதே எங்களின் விருப்பம். ஆனால், துர்கா பூஜை ஏற்பாட்டாளர்களுக்கு வருமான வரித் துறை சுமையை ஏற்றுகிறது.
"கங்கா சாகர்' விழாவுக்கு வரிவிதிவிலக்கை எனது தலைமையிலான அரசு அளித்துள்ளது.
துர்கா பூஜை குழுக்களுக்கு வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார் மம்தா.
சமூக வலைதளமான முகநூலில் அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டை இட்டுச் செல்லாமல், அரசியல் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. ஆயுதத் தொழிற்சாலை வாரியம், பிஎஸ்என்எல், இந்திய ரயில்வே உள்ளிட்டவற்றை தனியார்மயமாக்க  பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கூறி
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஆனால், தற்போதைய நிலையில் ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் அதை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
2018-2019-இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.58 சதவீதத்துடன் மேற்கு வங்கம் முன்னிலையில் உள்ளது. நாட்டின் பொருளாதார சரிவு நிலைக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று அந்தப் பதிவில் மம்தா குறிப்பிட்டுள்ளார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேற்கு வங்கத்தை அடுத்து, ஆந்திரப் பிரதேசம் (11.02 %), பிகார் (10.53 %), உள்ளன. இந்தப் பட்டியலில் 0.47 சதவீதத்துடன் கோவா கடைசியில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com