ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.2 என பதிவு!

ஜம்மு காஷ்மீரில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 என பதிவாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.2 என பதிவு!

ஜம்மு காஷ்மீரில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 என பதிவாகியுள்ளது. 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டுப்பாட்டு விதிமுறைகள் ஒரு சில தினங்களுக்கு முன்னர் தளர்த்தப்பட்டு, தற்போது தான் அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. 

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் இன்று மாலை 4.20 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 என பதிவாகியுள்ளது. இந்த தகவலை இந்திய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com