ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு: தேர்தல் ஆணையம் ஆலோசனை

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. 
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு: தேர்தல் ஆணையம் ஆலோசனை

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் தனி யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அதனை மறுசீரமைப்பது தொடர்பான வரையறை குறித்து தில்லியில் செவ்வாய்கிழமை ஆலோசனை நடைபெறுகிறது.

தலைமை தேர்தல் ஆணையர், துணை ஆணையர்கள் இருவர் மற்றும் மூத்த தேர்தல் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

அதேபோல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்வதற்கான தீர்மானமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகைசெய்யும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com