ஜம்மு-காஷ்மீர் விவகாரம் நமது நாட்டில் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது: மன்மோகன் சிங்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு,
ஜம்மு-காஷ்மீர் விவகாரம் நமது நாட்டில் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது: மன்மோகன் சிங்

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை (ஆக.13) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருப்பதால் மன்மோகன் சிங் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு,

ஜம்மு-காஷ்மீரில் எடுக்கப்பட்ட இந்த முடிவு மீது நம் நாட்டின் பல்வேறு மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதை அவர்கள் யாரும் விரும்பவில்லை. எனவே அவர்களின் குரலும் ஒலிக்க வேண்டும். அனைவரது கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அதுதான் நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்கவும், நீண்டகால நன்மைக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com