சுடச்சுட

    

    ஆந்திராவில் மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

    By DIN  |   Published on : 14th August 2019 01:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    andhra

    ஆந்திராவில் மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தின் கொப்பராம் கிராமத்தில் 3 சிறுவர்கள் இன்று காலை அருகிலிருக்கும் மசூதிக்கு சென்று வீடு திரும்பியுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் இருந்த கொடிமரத்தை பிடித்து 3 சிறுவர்கள் விளையாடியிருக்கிறார்கள். 

    இந்த சம்பத்தின்போது கொடிமரத்தின் மேலே சென்ற மின்கம்பி உரசியதில் அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அமீன் பீர் (11), கோஸ்(11) ஹூசைன் (10), ஆகிய 3 சிறுவர்களும் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai