சுடச்சுட

    

    கர்நாடகாவில் பள்ளிப் பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் 17 குழந்தைகள் காயம்

    By DIN  |   Published on : 14th August 2019 02:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    karnataka

    கர்நாடகாவில் பள்ளிப் பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் 17 குழந்தைகள் காயமடைந்தனர். 

    கர்நாடகா மாநிலம், மங்களூருவின் அருகே நந்தூர் பகுதியில் 17 குழந்தைகளுடன் பள்ளிப் பேருந்து இன்று காலை சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்தப் பகுதியில் இருந்த மரம் ஒன்று திடீரென முறிந்து பள்ளிப் பேருந்து மீது விழுந்தது. 

    இதில் 17 குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

    கர்நாடகாவில் அண்மையில் பெய்த கனமழைக்கு பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 
     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai