சுடச்சுட

  

  பாஜகவில் இணைந்த நெருங்கிய உதவியாளர்: மம்தாவுக்கு தொடரும் சிக்கல் 

  By DIN  |   Published on : 14th August 2019 07:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  shovan-chatterjee

   

  கொல்கத்தா: மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவரும், கொல்கத்தா முன்னாள் மேயருமான சோபன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்துள்ளது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

  மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 18 நாடாளுமன்றத் தொகுதிகளில் வென்று மமதாவிற்கு அதிர்ச்சியைக்கொடுத்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸை சேர்ந்தவர்கள் பா.ஜனதாவில் இணைவது தொடர்கதையாகி வருகிறது.

  இந்நிலையில் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவரும், கொல்கத்தா முன்னாள் மேயருமான சோபன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்துள்ளது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

  சிறு வயது முதலே திரிணமூல் காங்கிரசில் இணைந்து பணியாற்றி வந்த அவர், மம்தாவின் நம்பிக்கைக்குரியவராகவும் விளங்கினார். சோபன் சாட்டர்ஜி இரண்டு முறை கொல்கத்தாவின் மேயராக இருந்துள்ளார்.  அவர் பா.ஜனதாவிற்கு தாவியுள்ளது கட்சித் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  மேற்கு வங்காளத்தில் 2021-ல் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இது மம்தாவிற்கு பின்னடைவாக கருதபப்டுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai