காஷ்மீருக்கு செல்ல ஆளுநர் அனுப்பும் விமானம் தேவையில்லை: ராகுல் காந்தி

ஜம்மு-காஷ்மீருக்கு வந்து அங்குள்ள நிலைமையைத் தெரிந்து கொள்ள அங்கு பயணம் மேற்கொள்வேன். ஆனால், அதற்காக ஆளுநர் அனுப்புவதாகக் கூறும் விமானம் தேவையில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
காஷ்மீருக்கு செல்ல ஆளுநர் அனுப்பும் விமானம் தேவையில்லை: ராகுல் காந்தி


ஜம்மு-காஷ்மீருக்கு வந்து அங்குள்ள நிலைமையைத் தெரிந்து கொள்ள அங்கு பயணம் மேற்கொள்வேன். ஆனால், அதற்காக ஆளுநர் அனுப்புவதாகக் கூறும் விமானம் தேவையில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தில்லியில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்த ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீரில் வன்முறை நிலவுவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து ஜம்முவில் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு, ஜம்மு-காஷ்மீரின் உண்மை நிலவரத்தைக் காண ராகுல் காந்தி வர வேண்டும் என அழைக்கிறேன். அவரை அழைத்து வருவதற்கு விமானத்தை அனுப்பத் தயாராக உள்ளேன். அதன்பிறகு உண்மை நிலவரத்தைப் பார்த்துவிட்டு, அவர் பேச வேண்டும். ராகுல் காந்தி பொறுப்பான தலைவர். அவர் இதுபோல பேசியிருக்கக் கூடாது என்று பதிலளித்தார்.
இந்நிலையில், ஆளுநரின் இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சுட்டுரையில் (டுவிட்டர்) ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், நானும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் காஷ்மீர் மற்றும் லடாக்குக்கு பயணம் மேற்கொண்டு, அங்குள்ள நிலைமையைப் பார்வையிடலாம் என்று அழைப்பு விடுத்துள்ளதற்கு நன்றி. நான் நிச்சயமாக அங்கு வருவேன். ஆனால், அதற்காக நீங்கள் விமானம் எதையும் அனுப்பத் தேவையில்லை. நாங்கள் காஷ்மீரில் சுதந்திரமாகப் பயணித்து, அனைத்துத் தரப்பு மக்களையும் சந்திக்க அனுமதி அளித்தால் மட்டும் போதுமானது. அங்கு முக்கிய அரசியல் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்திருப்பதும், ஏராளமான பாதுகாப்புப் படை வீரர்களை குவித்திருப்பதும் ஏன்? என்று ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com