சுஷ்மாவுக்கு மத்திய அமைச்சரவை இரங்கல் தீர்மானம்

சமீபத்தில் காலமான முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு மத்திய அமைச்சரவை அஞ்சலி செலுத்தியது.


சமீபத்தில் காலமான முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு மத்திய அமைச்சரவை அஞ்சலி செலுத்தியது. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த வாரம் மாரடைப்பு காரணமாக சுஷ்மா காலமானார். இந்நிலையில், தில்லியில் மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை கூடி தீர்மானம் நிறைவேற்றியது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வெளிநாடுகளில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு மனிதநேயத்துடன் உதவியவர் சுஷ்மா ஸ்வராஜ். அவர் சிறந்த நிர்வாகி. இதன் காரணமாகவே, அமெரிக்காவின் நாளிதழான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் 2017ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் அரசியல்வாதி என்று சுஷ்மாவை அறிவித்தது. மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரையும், புகழ்பெற்ற அரசியல் தலைவரையும் இந்தியா இழந்து தவிக்கிறது. இளம் வயதிலேயே அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்ட சுஷ்மா, ஹரியாணா சட்டப் பேரவை உறுப்பினராக 25 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1990ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1998ஆம் ஆண்டு அக்டோபரில் தில்லியின் முதல் பெண் முதல்வரானார் என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com