நிதின் கட்கரி சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறால் பாதிப்பு

திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்பட 159 பயணிகள் சென்ற இண்டிகோ விமானம் தில்லி பயணத்தை ரத்து செய்தது.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியிலிருந்து தில்லி செல்லவிருந்த இண்டிகோ விமானம், தொழில்நுட்பப் பிரச்னையை எதிர்கொண்டிருப்பது விமானிக்கு திரையில் எச்சரிக்கை செய்தியாகத் தோன்றியது. இதையடுத்து, விமானத்தை தொடர்ந்து இயக்காமல் தொடங்கிய இடத்தில் மீண்டும் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து, வேறொரு விமானத்தில் பிற்பகல் 1.54 மணிக்கு விமானம் தில்லிக்கு புறப்பட்டுச் சென்றது. விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், நிதின் கட்கரி வேறு விமானத்தில் சென்றிருக்க வாய்ப்புள்ளது என்றார். தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட விமானம், 7.50 மணிக்கு புறப்பட்டு தில்லிக்கு 9.35 மணிக்குச் செல்ல இருந்தது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com