புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் விரைவில் அமல்: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்

புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகளும், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பும் அடுத்த 3 மாதத்துக்குள் உருவாக்கப்படும் என்று மத்திய உணவு மற்றும்
புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் விரைவில் அமல்: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்


புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகளும், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பும் அடுத்த 3 மாதத்துக்குள் உருவாக்கப்படும் என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
1986-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு, புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட மசோதா இந்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. புதிய சட்டத்தில், நுகர்வோர் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, உணவில் கலப்படம் செய்வோருக்கு சிறை தண்டனை, போலி விளம்பரங்கள் மூலம் மக்களை திசைதிருப்புவதை தடுப்பது உள்ளிட்ட அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விதிமுறைகள், எம்.பி.க்கள் மற்றும் அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பின்னர் உருவாக்கப்படும். நுகர்வோர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து மிக கவனமாக இந்த விதிமுறைகள் உருவாக்கப்படும்.
இந்த புதிய சட்டத்தின் கீழ் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படவுள்ளது. நுகர்வோர் அளிக்கும் புகார்களை விசாரிக்கும் அதிகாரமும், தானாக முன் வந்து நுகர்வோர் பிரச்னைகளை விசாரிக்கும் அதிகாரமும் அந்த அமைப்பில் இடம்பெறும் அதிகாரிகளுக்கு உண்டு.
வழக்குரைஞர் மூலமாகதான் புகார் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் நுகர்வோருக்கு இல்லை. அவர்கள் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். அவர்களுக்காக வாதாடுவதற்காக வழக்குரைஞர் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இதுவரை மாநிலங்களில் இருந்த நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள், நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் என்றழைக்கப்படும். அந்த ஆணையங்களின் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகள், புகார்கள் தீர்த்து வைக்கப்படும். தவறான விளம்பரங்களை வெளியிடும் நிறுவனங்களுக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com