ஹிந்து பாகிஸ்தான் கருத்து: சசி தரூருக்கு எதிராக கைது ஆணை

ஹிந்து பாகிஸ்தானை ஏற்படுத்தும் வகையில், நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை பாஜக திருத்தி எழுதக்கூடும் என்று சர்ச்சைக்குரிய வகையில்
ஹிந்து பாகிஸ்தான் கருத்து: சசி தரூருக்கு எதிராக கைது ஆணை


ஹிந்து பாகிஸ்தானை ஏற்படுத்தும் வகையில், நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை பாஜக திருத்தி எழுதக்கூடும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூருக்கு எதிராக கொல்கத்தா நீதிமன்றம் கைது ஆணை வெளியிட்டுள்ளது.
ஹிந்து பாகிஸ்தான் தொடர்பான கருத்துக்கு சசி தரூர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது. ஆனால் இக்கோரிக்கையை சசி தரூர் நிராகரித்து விட்டார்.
இதையடுத்து சசி தரூருக்கு எதிராக கொல்கத்தாவில் உள்ள தலைமை பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சுமித் சௌதுரி வழக்குத் தொடுத்தார். அதில் சசி தரூரின் கருத்து சமூகசீர்குலைவை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு, கொல்கத்தாவில் உள்ள தலைமை பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி தீபாஞ்சன் சென் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது சசி தரூருக்கு எதிராக கைது ஆணையை வெளியிட்டு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் மாதம் 24ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com