சுடச்சுட

  
  abinandan


  இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானுக்கு வீர சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த விருது அறிவிப்பை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

  கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி, இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டி அடித்தபோது, அந்நாட்டு எல்லைக்குள் தவறுதலாக சென்றுவிட்டார் அபிநந்தன்.
  அப்போது, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அபிநந்தனின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினர். பாராசூட் உதவியுடன் அபிநந்தன் தரையிறங்கினார். அப்போது, அந்தப் பகுதி மக்கள் அவர் இந்திய வீரர் என்பதை அறிந்து அடித்து துன்புறுத்தினர். 
  தன்னிடம் இருந்த ராணுவ ஆவணங்கள் எதுவும் எதிரிகளிடம் கிடைத்துவிடக் கூடாது என்று அவற்றை கிழித்தெறிந்தார் அபிநந்தன். பின்னர், அந்நாட்டு ராணுவ வீரர்கள் அவரை சிறை பிடித்தனர். இதையடுத்து, அவர் நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
  பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் விசாரித்தபோதும் அவர்களிடம் எந்தவொரு தகவலையும் அபிநந்தன் கூற மறுத்துவிட்டார்.
  அவரது வீர தீரத்தைப் பாராட்டும் வகையில் வீர சக்ரா விருது வழங்கப்படுவதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. அவருடன், பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் பங்கேற்ற விமானப் படையின் பிற 5 விமானிகளுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  மொத்தம் 946 விருதுகள்!: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினருக்கு சுதந்திர தினத்தையொட்டி, அதிக எண்ணிக்கையிலான பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  மொத்தம் 946 பதக்கங்களை பாதுகாப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
  வீரதீர செயல்களுக்காக 177 குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்படவுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் வீரர்களுக்கு 114 விருதுகளும், நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் வீரர்களுக்கு 62 பதக்கங்களும் வழங்கப்படவுள்ளன.
  வீரமரணம் அடைந்த 9 வீரர்களின் குடும்பத்தினருக்கு விருது வழங்கப்படும். மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் முந்தைய ஆண்டுகளைப் போல், அதிக எண்ணிக்கையிலான விருதுகளை ( இந்த முறை 72 விருதுகள்) பெறுகின்றனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai