சுடச்சுட

    

    இந்தியாவுடனான கடல்சார் பாதுகாப்பில் கூடுதல் ஒத்துழைப்பு: ஆஸ்திரேலியா

    By DIN  |   Published on : 15th August 2019 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    LINDA-RENOLDS


    இந்தியாவுடனான கடல்சார் பாதுகாப்பில் கூடுதல் ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
    ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இந்திய-பசிபிக் மாநாடு கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ் பேசியதாவது:
    இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது எல்லையை சீனா விரிவாக்கம் செய்து வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டில் ஜிபூட்டியில் தனது ராணுவ தளத்தை அமைத்தது.
    இந்தப் பின்னணியில்தான், இந்தியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுடன் கடல்சார் பாதுகாப்பில் அதிக ஒத்துழைப்பு அளிக்க முடிவு செய்துள்ளோம்.
    அந்நாடுகளுடன் இணைந்து செயலாற்றுவோம்.  இந்தியாவுடன் கடந்த 2014ஆம் ஆண்டில் பாதுகாப்பு தொடர்புடைய 11 பயிற்சிகளை இணைந்து நடத்தினோம். 2018ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை மும்மடங்கானது.
    கடல்சார் பாதுகாப்புடன், நிலம், வான்வழி பாதுகாப்பிலும் மேலும் ஒத்துழைப்பு அளிக்க முடிவு செய்துள்ளோம். ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது தொடர்பாகவும், புதிய ஒப்பந்தங்களை செய்துகொள்ளவும் வருமாறு இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அழைப்பு விடுத்துள்ளேன் என்று லிண்டா ரெனால்ட்ஸ் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai