சுடச்சுட

  

  எல்லையில் அத்துமீறல்: இந்திய துணைத் தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

  By DIN  |   Published on : 15th August 2019 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகக் கூறி, இந்தியத் துணைத் தூதர் கௌரவ் அலுவாலியாவை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
  இதுதொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளரும், தெற்கு ஆசியா-சார்க் நாடுகள் பிரிவு தலைமை இயக்குநருமான முகமது பைசல் கூறியதாவது:
  எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டியுள்ள ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் இந்திய ராணுவத்தினர் கடந்த செவ்வாய்க்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில், பாகிஸ்தானின் லேச்சயல் கிராமத்தைச் சேர்ந்த 38 வயது நபர் உயிரிழந்தார். மக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி, கனரக மற்றும் தானியங்கி ஆயுதங்கள் மூலம் இந்திய ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக உள்ளது.
  இந்திய ராணுவத்தின் இந்த செயல், சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கும் மனிதாபிமான சட்டங்களுக்கும் முற்றிலும் எதிரானதாகும். இந்திய ராணுவத்தின் தாக்குதல்கள், பிராந்திய அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இதுதொடர்பாக, பாகிஸ்தானுக்கான இந்திய துணைத் தூதர் கௌரவ் அலுவாலியாவை நேரில் அழைத்து, கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 2003-இல் ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை இந்தியா மதித்து செயல்பட வேண்டும்; எல்லையில் அமைதியை பராமரிக்க, இந்திய ராணுவத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என்று இந்திய துணைத் தூதரிடம் வலியுறுத்தப்பட்டது என்றார் முகமது பைசல்.
  முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியும், அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்தும் மத்திய அரசு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் அஜய் பிசாரியாவை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற பாகிஸ்தான் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai