சுடச்சுட

  

  சிறப்பு அந்தஸ்து நீக்கம்: பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பதிலடி

  By DIN  |   Published on : 15th August 2019 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  nithin


  ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் பயங்கரவாதிகளுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
  மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் தன்னார்வ அமைப்பு சார்பில் வந்தே மாதரம் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற நிதின் கட்கரி மாணவர்கள் மத்தியில் மேலும் பேசியதாவது:
  ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்திருப்பதன் மூலமாக, காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலையில் ஈடுபடும் பாகிஸ்தானியர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், இந்தியாவிடம் இருந்து பயங்கரவாதிகளுக்கும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் தற்போது அமைதி நிலவுகிறது. இதனால், நிகழாண்டின் சுதந்திர தினம் இன்னும் கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாடப்படும். ஒருங்கிணைந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவதற்கு நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும் என்றார் அவர்.
  அவரைத் தொடர்ந்து, நடிகரும், குருதாஸ்பூர் தொகுதி பாஜக எம்.பி.யுமான சன்னி தியோல் பேசியதாவது:
  சுதந்திர தின நன்னாளில், நாம் எப்படி சுதந்திரத்தைப் பெற்றோம் என்பதை மறந்துவிடக் கூடாது. மகாத்மா காந்தி, பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், சுபாஷ் சந்திர போஸ், லோக்மான்ய திலக் மற்றும் பலர் நாட்டுக்காக செய்த தியாகத்தை நாம் நினைவுகூர வேண்டும் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai