சுடச்சுட

  

  வாஜ்பாயியின் சாதனையை சமன் செய்தார் பிரதமர் மோடி: எப்படி தெரியுமா?

  By DIN  |   Published on : 15th August 2019 01:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi_flag


  புது தில்லி: செங்கோட்டையில் தொடர்ந்து 6வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றியதன் மூலம் முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

  இன்று ஆகஸ்ட் 15ம் தேதி. இந்தியாவின் 73வது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இன்று புது தில்லியில் உள்ள செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 

  பாஜகவைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயிதான், இதுவரை செங்கோட்டையில் தொடர்ந்து 6 முறை தேசியக் கொடி ஏற்றியவர் என்ற பெருமையை பெற்றிருந்தார். அவர் 1998 முதல் 2003ம் ஆண்டு வரை தொடர்ந்து 6 முறை தேசியக் கொடியேற்றியது இதுவரை சாதனையாக இருந்தது. இந்த சாதனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று சமன் செய்துள்ளார்.

  2014ம் ஆண்டு பாஜக தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சியமைத்தது முதல் தொடர்ந்து 6வது முறையாக இன்று பிரதமர் மோடி கொடியேற்றினார்.

  இதுவரை முறியடிக்கப்படாத ஒரு சாதனையை வைத்திருப்பவர் யார் தெரியுமா? அவர்தான் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு. தொடர்ந்து 17 முறை தேசியக் கொடி ஏற்றியவர் என்ற பெருமைக்குரியவராக திகழ்கிறார் ஜவகர்லால் நேரு.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai