சுடச்சுட

  

  நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனுக்கு மனைவி கொடுத்த கொடூர தண்டனை 

  By DIN  |   Published on : 15th August 2019 09:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  starvation_death

   

  மும்பை: தனது நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனுக்கு மனைவி ஒருவர் கொடுத்த கொடூர தண்டனை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

  அசாமைச் சேர்ந்த பவிஷ்யா புராஹோகைன்  என்பவர் மும்பையில் உள்ள வசாய் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவி குயின் சியா. அதே பகுதியில் வசித்து வரும் நாயக் என்பவர் புராஹோகைனின் நண்பவராவார். இவர் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வார். இதன் காரணமாக புராஹோகைனுக்கு தனது மனைவி மீது சந்தேகம் வரத் தொடங்கியது. நாயக்குடன் தனது மனைவி தகாத உறவு வைத்திருப்பதாக நினைத்தார். இதைத் தொடர்ந்து தம்பதியரிடையே அடிக்கடி சண்டை வரத் துவங்கியது. அப்படி எதுவும் இல்லை என்று மனைவி கூறியும் புராஹோகைன் இத்தகைய சண்டைகளைத் தொடர்ந்துள்ளார்.

  இந்நிலையில் செவ்வாயன்று வழக்கம் போல இருவரும் சண்டை போட்டுள்ளனர். பின்னர் புராஹோகைன் உறங்கி விட்டார். பின்னர் நாயக்கை வீட்டுக்கு அழைத்த குயின்சியா, அவர் உதவியோடு கணவனின் கால்களைக் கயிற்றால் கட்டியுள்ளார். சுத்தியலால் அவரை சரமாரியாகத் தாக்கினார்.  அத்தோடு நில்லாமல் மிளகாய்ப் பொடியை எடுத்து வந்து கணவரது கண்களில் தூவினார். பின்னர் அடுப்பில் இருந்து கொதிக்கும் எண்ணெய்யை சட்டியுடன் தூக்கி வந்து கணவர் மீது ஊற்றியுள்ளார். புராஹோகைனின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டுள்ளனர்.  அதன் பின்னர் நாயக்கையும் குயின்சியாவையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசார் தொடர்ந்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

  உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட புராஹோகைனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai