சுடச்சுட

  

  சுதந்திர தின விழா: மக்களுடன் இணைந்து நடனமாடிய லடாக் எம்.பி! வைரல் விடியோ

  By ENS  |   Published on : 15th August 2019 05:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Ladakh_MP

   

  சுதந்திர தின விழாவையொட்டி, லடாக் தொகுதி பாஜக எம்.பி அங்குள்ள மக்களுடன் இணைந்து நடனமாடிய விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

  ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி அறிவித்தார். மேலும், ஜம்மு காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

  இது தொடர்பான தீர்மானம் மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா, கடும் அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் விவாதத்தின் போது, மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து, லடாக் தொகுதி பாஜக எம்.பி. ஜாம்யாங் சேரிங் நமங்யால் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலானது. அவர் பேசியது குறித்து பிரதமர் மோடியும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். 

  இந்நிலையில், நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று ஜம்மு காஷ்மீரில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் ஸ்ரீநகரில் கொடியேற்றினார். அதேபோன்று லடாக்கிலும் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

  லடாக் தொகுதி பாஜக எம்.பி ஜாம்யாங் சேரிங் நமங்யால் பரம்பரிய உடை அணிந்து, மக்களுடன் இணைந்து நடனம் ஆடினார். லடாக் மக்கள் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும், மக்களுடன் இணைந்து பாரம்பரிய மேளத்தை இசைத்தார். 

  அவரது விடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பகிரப்பட்டு வருகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai