லடாக்கில் ராணுவ வீரர்களோடு சுதந்திர தினம் கொண்டாடிய 'தல' தோனி!

ஜம்மு காஷ்மீரில் ராணுவப் பயிற்சி பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி இன்று லடாக்கில் உள்ள ராணுவ வீரர்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாடினார். 
லடாக்கில் ராணுவ வீரர்களோடு சுதந்திர தினம் கொண்டாடிய 'தல' தோனி!

ஜம்மு காஷ்மீரில் ராணுவப் பயிற்சி பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி இன்று லடாக்கில் உள்ள ராணுவ வீரர்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாடினார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி,  ராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கர்னலாக உள்ளார். உலகக்கோப்பை  கிரிக்கெட் தொடருக்குப் பின்னர்,  அவர் 2 மாதங்களுக்கு ஜம்மு காஷ்மீரில் ராணுவப்  பயிற்சிக்காக சென்றுள்ளார். கடந்த ஜூலை 31ம் தேதி சென்ற அவர், ஆகஸ்ட் 15ம் தேதி வரை காஷ்மீரில் தங்கி, பாராசூட் ரெஜிமண்டில் பயிற்சி பெற்று வருகிறார். 106 டெரிட்டோரியல் ஆர்மி பட்டாலியன் குழுவினருடன் இணைந்து அவர் பணியாற்றி வருகிறார். ராணுவ வீரர்களுடன் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில், இன்று நாட்டின் 73வது சுதந்திர தினத்தையொட்டி, தோனி நேற்று லடாக்கிற்கு வந்தார். அங்குள்ள ராணுவ அதிகாரிகள், அவருக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, ராணுவ வீரர்களோடு அவர் கலந்துரையாடினார். 

அதன் தொடர்ச்சியாக, லடாக்கில் உள்ள ராணுவ மருத்துவனைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அங்கு சிகிச்சை பெறும் வீரர்கள் மற்றும் மக்களுடன் கலந்துரையாடினார். 

இன்று லடாக்கில் உள்ள ராணுவ வீரர்களுடன் அவர் சுதந்திர தினத்தை கொண்டாடினார். 

முன்னதாக, ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, ஜம்மு காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com