சுடச்சுட

  

  காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு 

  By DIN  |   Published on : 15th August 2019 07:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Pulwama Jammu And Kashmir

   

  பூஞ்ச்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் சுதந்திர தினமான வியாழனன்று பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகளின் மீது அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.

  ஜம்மு  காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் கேஜி துறை பகுதியில் வியாழனன்று போர்நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு  நடத்தியது. உடனடியாக இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து உள்ளது.

  இதுகுறித்து வடக்கு பிராந்திய ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  சுதந்தர தினத்தினை முன்னிட்டு கடந்த சில நாட்களாக, எல்லைப்பகுதியில் பாகிஸ்தானால் ஊடுருவல் முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இதனை இந்திய இராணுவம் முற்றிலும் எச்சரிக்கையாக முறியடித்துள்ளது.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai