பாகிஸ்தான் இல்லைன்னா பங்களாதேஷ்! சுதந்திர தின விழாவையொட்டி, எல்லையில் இனிப்பு பரிமாற்றம்

இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு எல்லையில் இந்திய - பங்களாதேஷ் வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். 
பாகிஸ்தான் இல்லைன்னா பங்களாதேஷ்! சுதந்திர தின விழாவையொட்டி, எல்லையில் இனிப்பு பரிமாற்றம்

இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு எல்லையில் இந்திய - பங்களாதேஷ் வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். 

நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றியதுடன் மக்களுக்கு உரையாற்றினார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் ஆளுநர் சத்யபால் மாலிக் இன்று கொடியேற்றினார். புதிய யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள லடாக்கிலும் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

வழக்கமாக சுதந்திர தினத்தின் போது எல்லையில் இரு நாட்டு வீரர்களிடையே இனிப்பு பரிமாறிக்கொள்ளப்படும் நிகழ்வு நடைபெறும். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த  முறை இந்திய -பாகிஸ்தான் வீரர்களிடையே இனிப்பு பரிமாற்ற நிகழ்வு நடைபெறவில்லை. இந்திய வீரர்கள் இனிப்பு அளித்த போதிலும், பாகிஸ்தான் வீரர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்ததாகக்  கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்திய -பங்களாதேஷ் எல்லையில் உள்ள எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com