பாஜகவில் கொல்கத்தா முன்னாள் மேயர்

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா நகர முன்னாள் மேயரும், திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவுமான சோவன் சாட்டர்ஜி பாஜகவில் புதன்கிழமை இணைந்தார்.
தில்லியில் பாஜக பிரமுகர் முகுல் ராய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சாட்டர்ஜி (வலது).
தில்லியில் பாஜக பிரமுகர் முகுல் ராய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சாட்டர்ஜி (வலது).


மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா நகர முன்னாள் மேயரும், திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவுமான சோவன் சாட்டர்ஜி பாஜகவில் புதன்கிழமை இணைந்தார்.
முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசில் அவர் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில், மேற்கு வங்க பாஜக மூத்த தலைவர் முகுல் ராய், அக்கட்சியின் மாநில பொதுச் செயலர் அருண் சிங் ஆகியோர் முன்னிலையில் சோவன் சாட்டர்ஜி அக்கட்சியில் இணைந்தார்.
முகுல் ராய் கூறுகையில், அவரது வருகை கட்சியை மேலும் வலுப்படுத்தும். 
திரிணமூல் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைக் கூட பெறாது என்பதை மீண்டும் ஒரு முறை கூற விரும்புகிறேன் என்றார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளில் தலா ஒரு எம்எல்ஏ ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். 
அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 22 தொகுதிகளை திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றியது.
கட்சியிலிருந்து சோவன் நீக்கம்-திரிணமூல்: பாஜகவில் இணைந்த சோவன் சாட்டர்ஜியை கட்சியை விட்டு திரிணமூல் காங்கிரஸ் நீக்கியது. இதனை அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com