மாநிலங்களுக்கு இடையேயான குழு மாற்றியமைப்பு

மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளை விசாரித்து தீர்வு காணும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளை விசாரித்து தீர்வு காணும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் 6 மத்திய அமைச்சர்களும், அனைத்து மாநில முதல்வர்களும் உறுப்பினர்களாக இடம்பெறுவர். 
இதுதொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மாநிலங்களுக்கு இடையேயான குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட், நகர்ப்புற வீட்டு வசதித் துறை (தனிப் பொறுப்பு) அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெறுவர்.
இவர்களைத் தவிர, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களும் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இடம்பெறுவர். சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக குழுவில் இடம்பெறுவர்.
அத்துடன் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ராம்விலாஸ் பாஸ்வான், ரவிசங்கர் பிரசாத், ஹர்சிம்ரத் கெளர் பாதல், எஸ்.ஜெய்சங்கர், ரமேஷ் போக்ரியால், அர்ஜுன் முன்டா, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் நிரந்தர அழைப்பாளர்களாக இருப்பார்கள்.
இதேபோல், மாநிலங்களுக்கு இடையேயான குழுவுக்கான நிலைக்குழுவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான இக்குழுவில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர், தவார் சந்த் கெலாட், கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகிய நால்வரும், 8 மாநிலங்களின் முதல்வர்களும் உறுப்பினர்களாக இடம்பெறுவர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com