சுடச்சுட

  

  ஜம்மு காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்: தலைமைச் செயலர் 

  By DIN  |   Published on : 16th August 2019 03:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jk_sectre


  ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

  ஜம்மு காஷ்மீர்  தலைமைச் செயலர் சுப்ரமணியம் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஜம்மு காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அதே சமயம், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

  ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே அரசியல் கட்சித் தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் வரும் திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்து கொண்டு, தொலைத்தொடர்பு வசதிகள் படிப்படியாக வழங்கப்படும். அதுபோலவே கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai