ஆர்.ஐ.சாட்-3 செயற்கைக்கோளை விரைவில் விண்ணுக்கு அனுப்புகிறது இஸ்ரோ

சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவி சாதனைகளைப் படைத்து வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) அடுத்ததாக, இந்திய ராணுவ கண்காணிப்புக்கு உதவக்கூடிய ஆர்.ஐ.சாட்-3 செயற்கைக்கோளை விண்ணில்
ஆர்.ஐ.சாட்-3 செயற்கைக்கோளை விரைவில் விண்ணுக்கு அனுப்புகிறது இஸ்ரோ


சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவி சாதனைகளைப் படைத்து வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) அடுத்ததாக, இந்திய ராணுவ கண்காணிப்புக்கு உதவக்கூடிய ஆர்.ஐ.சாட்-3 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது.
பி.எஸ்.எல்.வி.-சி47 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் இன்னும் ஓரிரு வாரங்களில் விண்ணில் ஏவப்பட உள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், புதன்கிழமை முதல் நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. அது வரும் 20-ஆம் தேதி, நிலவின் சுற்றுவட்டப் பாதையைச் சென்றடைய உள்ளது. இந்தச் சூழலில், அடுத்தடுத்து செயற்கைக்கோள் திட்டங்களைச் செயல்படுத்தும் பணிகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். 
குறிப்பாக, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தைக் குவித்து வரும் இந்தச் சூழலில், இந்திய ராணுவக் கண்காணிப்புக்கு கூடுதல் வலுச் சேர்க்கும் வகையில்
ஆர்.ஐ.சாட்-3 என்ற ரேடார் தொழில்நுட்பத்தில் செயல்படக் கூடிய அதிநவீன செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
கடந்த 2009 ஏப்ரலில் ஆர்.ஐ.சாட்-2 செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. அடுத்து 2012-இல் ஆர்.ஐ.சாட்-1 செயற்கைக்கோளை அனுப்பியது. கடந்த மே 22-இல் ஆர்.ஐ.சாட்-2பி செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது ஆர்.ஐ.சாட்-3 செயற்கைக்கோள் அனுப்பப்பட உள்ளது.
எல்லைக் கண்காணிப்பு, வேளாண் மற்றும் வனக் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை போன்ற செயல்பாடுகளுக்கு உதவ உள்ள இந்த செயற்கைக்கோள் பகல், இரவு நேரங்களில் மட்டுமின்றி வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்போதுகூட பூமியைத் தெளிவாக படம்பிடித்து அனுப்பும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் தினமணிக்கு அளித்த பேட்டியில், அடுத்ததாக பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமாக ஆர்.ஐ.சாட்-3 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com